உங்கள் கணினிக்கு இலவசமாக பராமரிக்கும் சேவை இதோ – PC Brother System care.

.
நம் கணினியின் செயல்பாடு நன்றாக இருக்கவேண்டும் எனில் அதன் பராமரிப்பு முக்கியம். கணினியை தொடர்ந்து உபயோகிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல்பாடு குறைய தொடங்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.முக்கியமாக registry errors, fragmented disk, உல் நுழையும்போது செயல்படும் தேவையற்ற செயல்பாடுகள்( unwanted startup processes ), unoptimized RAM மற்றும் இன்னும் பல.
இந்த குறைப்பாடை தனி தனியாக சரி செய்ய பல இலவச மென்பொருட்கள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் சரிசெய்ய சில இலவச மென்பொருட்கள் மட்டுமே உள்ளன.
அதில் விண்டோஸ் இலவச செயலி Brother System care உங்கள் கணினியை நன்றாக பராமரிக்கும். இது பலவகை செயல்பாடுகளை செய்யவல்லது.
கணினி செயல்பாட்டை பார்க்க வல்லது, (scanning)வருடுதல், registry தவறுகளை நீக்ககூடியது , பலவித கணினி பொருட்கலின் செயல்பாட்டை கவனிக்க வல்லது , கணினி கட்டமைப்பு வசதி, (Hard Disk)கணினி வன்வட்டு, RAM ஆகியவற்றின் செயல்பாடுகளை அதிகரிக்க வல்லது, மேலும் பலவற்றை செய்யக் கூடியது.