Showing posts with label labels4. Show all posts
Showing posts with label labels4. Show all posts

செம திரை விமர்சனம் | Sema Movie Review | Thirai Vimarsanam

சென்னை: திருமணத்துக்கு பெண் கிடைக்காத இளைஞனுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம் 'செம'.

காளி – திரை விமர்சனம் | Kaali Movie Review | Thirai Vimarsanam

விஜய் ஆண்டனி தேர்வு செய்யும் படங்களின் கதைகள் சற்றே வித்தியாசமாக இருக்கும் என்கிற நம்பிக்கையை அவர் இது வரை நடித்தப் படங்கள் மூலம் நமக்கு ஏற்படுத்தியுள்ளார். அந்த நம்பிக்கை இந்தப் படத்திலும் வீணாகப் போகவில்லை. அதே சமயம் ஒரு மத்தியமானப் படத்தைத் தான் கொடுத்திருக்கிறார். அந்த அளவில் சற்று ஏமாற்றமே. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் எழுதி இயக்கியுள்ளப் படம். வணக்கம் சென்னை அவரின் முதல் படம். அதே மாதிரி ஒரு லைட்டான படம் இது.
ஆரம்பம் விறுவிறுப்பாக உள்ளது. அமெரிக்காவில் சுவாரசியமாகத் தொடங்கும் கதை இந்தியா வந்த பிறகு எப்பவும் போல ஒரு மசாலா கலவையாக மாறிவிடுகிறது. விஜய் ஆண்டனியிடம் ஒரு நல்லவர் என்கிற நம்பகத் தன்மை அவர் முகத்திலும் உடல் மொழியிலும் நிறைய இருப்பதால் அதுவே அவர் செய்யும் பல பாத்திரங்களுக்குப் பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. இது இந்தப் படத்திலும் கைக் கொடுக்கிறது. நடிப்பைப் பொறுத்த வரையில் நன்றாக செய்திருக்கிறார்

நம் காதல்

உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்...!

சொர்க்கம்

மண்ணில் தெரியுது சொர்க்கம்
சொர்க்கம் என்பது எங்கே உள்ளது
சொலவா முடியாது
நற்கரு ணையுடன் மானுடம் நடந்தால்
நமைவிட மேல் ஏது
மண்ணில் தெரியுது சொர்க்கம் காண
மானுடரே வாங்க
கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக்
கதைகள் ஏன் போங்க
பகைவனை மோதிச் சுட்டுவி டாமல்
பாசம் பொழியுங்க
புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க
போரை அழியுங்க
எல்லா மனிதரும் ஏவாள் பிள்ளை
என்றால் ஏன் சண்டை

கருகிய கனவுகள்

காணும் காட்சியெல்லாம்
கேட்கும் செய்தியெல்லாம்
படிக்கும் இதழ்களெல்லாம்
தினந்தோறும் விபத்துகள்,
கொலை, கொள்ளை,
தீவிரவாதம்
மரணங்கள் மரணங்கள் மரணங்கள்
கேட்டுக் கேட்டு பார்த்துப் பார்த்து
மரத்துப் போனது மனசு

கூண்டுக் கிளிகள்

காதல் கொண்ட கணவர்களே
கண்ணம்மாபோல் எமைப் பார்ப்பீரோ

கனவில் வந்தவள்


நேற்று என் கனவில் வந்தாய்
நிஜம்போலவே இருந்தது கண்ணம்மா

தவணைக் காதல்

ஏக்கத்தினால் தூக்கம் மறந்தேன்
அடியே உன்
ஏறுக்குமாறான விழி அசைவால்.

என் கன்ணம்மா


கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு
கவிதையிலே நான் ரசித்தேன் நேற்று-அதைக்
கண்ணெதிரே நீ எனக்குக் காட்டு!

தென்றல் காற்றாய்

தென்றல் காற்றாய்
வந்தாய் நீ
என்னையே கட்டிச்
சென்றுவிட்டாயடி!

உயிரற்ற பொம்மையாய்
கிடக்கின்றேன்
உன் காதலால்!

கவிதை தொகுப்புகள்


தேடல் 

எனக்கான தேடல்களில்
தொலைந்து போகிறேன்;
இப்பொழுது
என்னையும் தேடி!



**********************************************************************************

பாறை 

பாறையாக கிடக்கிறேன்
இதயம் கல்லாக;
செதுக்க நினைக்கிறார்கள்!
உடைகிறது உளிகள் மட்டுமே!

மழையே... ( கவிதை )


நீ வருவாய் என
தினம் தினம்
எதிர் பார்த்து
காத்திருக்கின்றேன்!

நீ வந்தால்
என்னவள்
குதித்து விளையாடுவாள்
அப்பொழுது ஒரு
ஓரமாய் நான்
நின்று ரசிப்பேன்
உன்னோடுவிளையாடும்
என்னவளை!

அந்த மேகமே
எனக்காகத்தான்
உன்னை அனுப்புகின்றனவா???
நீ விழும்
ஒவ்வொரு துளியும்
என் மனக்கதவை
தட்டுகின்றது!
நீ தினமும்
வர வேண்டும்
வருவாயா????

ஏழ்மையும் தூக்கமும்

  

பசியால் தூக்கம் இல்லாமல் புரள்கிறேன்
வயிர் முட்ட என் ரத்தத்தை குடித்தும் ஓயவில்லை
என் வீட்டின் கொசுக்களின் ஆட்டம் 

நன்றி  பிரவீனு 

 

நீயே ஒரு கவிதை - அம்மா

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

 நன்றி Eluthu