போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க...

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட்டை எளிதான முறையில் ஒரு ஒளிப்படத்திற்கு எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம். (Add Rain effect to a photo in Photoshop)

1.வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட ஒரு நல்ல ஒளிப்படத்தை
போட்டோஷாப்பில் திறந்து கொள்ளவும்.
2.Ctrl + J அழுத்தி புதிய லேயரை உருவாக்கவும். படத்தின் Brightness/ Contrast அளவுகளை சரிசெய்துகொள்ளவும்.
3.Background மற்றும் Foreground வண்ணங்கள், வெள்ளை மற்றும் கருப்பாக இருக்கவேண்டும். இதற்கு D அழுத்தவும்.
4.Filter மெனுவிற்கு சென்று Render->Clouds கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் படம் இப்படி இருக்க வேண்டும்.
5.Filter மெனுவிற்கு சென்று Noise-> Add Noise கிளிக் செய்து வரும் பெட்டியில்
60 என்ற மதிப்பைக் கொடுங்கள். கீழ்வரும் வருமாறு Gaussian, Monochoromatic என்பதையும் டிக் செய்யவும்.
இப்போது படம் முழுவதும் புள்ளிப்புள்ளியாய் இருக்கும்.

6.Filter மெனுவில் Blur->Motion blur கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில்
Angle என்பதில் 73 என்ற மதிப்பையும் Distance என்பதில் 10 என்ற மதிப்பையும்
கொடுங்கள்.
இப்போது படம் அடர்த்தியான புள்ளிகளாய் இருக்கும்
7.Layer1 ன் Blending mode ஐ Screen க்கு செட் செய்யவும்.
8.Ctrl + L அழுத்தி வரும் Levels பெட்டியில் நடுவில் உள்ள புள்ளியை உங்கள் படத்திற்கு ஏற்றவாறு நகர்த்தவும்.
இப்போது உங்கள் படத்திற்கு மழை பெய்த எஃபெக்ட் கிடைத்து விடும், மின்னலை புகைப்படத்தில் சுலபமாக வரவழைக்கலாம் இங்கு கிளிக் செய்யவும். பயன்படுத்திப்பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.