இமேஜ் மற்றும் ஆடியோ வீடியோக்கள் பல வகையில் இணையத்தில் கிடக்கின்றன இதில் நமக்கு தேவையானதை இணையத்தில் இருந்து தரவிறக்கி
கொள்கிறோம். ஒரு சிலவகையான இமேஜ் மற்றும் ஆடியோ வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில்
இருக்கும் மற்றும் இந்த இமேஜ் மற்றும் ஆடியோ வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய
நினைத்தாலோ இந்த வகை இமேஜ் மற்றும் ஆடியோ வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் Format Factory என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் Format Factory என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
- இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
- எந்த இமேஜ்யும் 3JPG, PNG, ICO, BMP,GIF, TIF, PCX, TGA இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்
- எந்த வீடியோவையும் All to Mobile Device, MP4, AVI, 3GP, RMVB, GIF, WMV, MKV, MPG, VOB, MOV, FLV, SWF இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்
- எந்த ஆடியோவையும் MP3, WMA, FLAC, AAC, MMF, AMR, M4A, M4R, OGG, MP2, WAV, Allto Wavepack இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்
- வீடியோவில் வுள்ள பாடலையோ அல்லது வேறு ஏதேனும் ஆடியோவையோ தனியாக பிரித்து கொள்ளலாம்.
- WINDOWS7/ VISTA / XP - க்கு உகந்தது.
- இந்த மென்பொருளை உங்கள் விருப்பம் போல் தீம் மாற்றி அழகாக்கி கொள்ளலாம்.
- 57 வகையான மொழிகளுக்கு உகந்தது. உபயோக்கிக்கும் முறை:
- * கீழே உள்ள DOWNLOAD பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
- * உங்களுக்கு வரும் ZIP பைலை EXTRACT செய்து உங்கள் கணினியில்Format Factory மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- * உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இதில் முதல் படியில் உள்ள தேவையான பார்மட்டில் கிளிக் செய்து கொண்டு அங்கு நீங்கள் மாற்ற வேண்டிய பார்மட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை ட்ராக் செய்தோ அல்லது அந்த கட்டத்தில் க்ளிக் செய்தோ தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து OK க்ளிக் செய்து கொள்ளுங்கள் முடிவில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டியது Convert Start பட்டனை. அழுத்தியவுடன் உங்கள் File அளவை பொருத்து உங்கள் File Converter ஆகி வரும். இது போன்று உங்களுக்கு தேவையான இமேஜ் மற்றும் ஆடியோ வீடியோக்கள் தேவையான வடிவில் மாற்றி கொள்ளலாம்.
இதில் உள்ள language க்ளிக் செய்து உங்கள் மொழி மாற்றி கொள்ளலாம்
இதில் உள்ள Skin க்ளிக் செய்து உங்கள்மென்பொருளின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்
நண்பர்களே
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும்
மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.