உலகத்தமிழ் செம்மொழியையொட்டி அண்ணாபல்கலைகழகம் அகராதியை வெளியிட்டுள்ளார்கள்.ஆங்கில சொற்களுக்கு உண்டான தமிழ்சொற்கள் சுமாராக நமக்கு தெரியும்.தமிழிலேயே அதற்குண்டான துாய தமிழ்சொல் நமக்கு தெரியாது.இந்த இணையதளத்தில் அவர்கள்அருமையாக வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாது அந்த சொல்லின் ஆங்கில உச்சரிப்பு - அந்த சொல்வரும் குறள், பாடல்கள்.அந்த சொற்கள் சம்பந்தமான பிற சொற்கள் என வெளியிட்டு அசத்திவிட்டார்கள்.அவர்களின் இணையதளம் காண இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
இதில் வேண்டிய வார்த்தைகளை தட்டச்சு செய்யவும். ஆங்கிலம் - தமிழ் என இரண்டு மொழித்தேர்வுகள் உள்ளது.இதன் ஒவ்வொரு பயன்பாடும் கீழே விளக்கப்பட்டுள்ளது.
இதன் பக்கத்தில் உள்ள கீ-போர்ட் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வேண்டிய வார்த்தையை கீ-போர்ட் மூலம் தட்டச்சு செய்து தேடலாம். நான் Gold(பொன் -தங்கம்)என்கின்ற வார்த்தையை தட்டச்சு செய்துள்ளேன்.வந்த விடை கீழே-
நமது சொல்லின் தொடர்புடைய சொற்கள் முதற்கொண்டு அந்த சொல்வரும் பாடல்கள்.திருக்குறள்,படங்கள்.என 10 க்கும் மேற்பட்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள வசதிகளை பாருங்கள்.
இதில் பொன் என்கின்ற வார்த்தைக்கு வரும் திருக்குறள் கீழே-
2 லட்சத்திற்கும் மேற்பட்ட சொற்களை இணைத்துள்ளார்கள்.நாமும் புதிய சொற்களையும் நமது கருத்துக்களையும் அவர்களுக்கு அனுப்பிவைக்கலாம். அதற்கான வசதியை இணைத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.