கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? விவாதத்தில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். முதலில் டி.வி.ஷோ வந்ததா - இல்லை கம்யுட்டர் விளையாட்டு முதலில் வந்ததா? யார் காப்பி அடித்தது என்று தெரியவில்லை..விளையாட்டை பாருங்கள்
பிரபல விளையாட்டு டீலா - நோ -டீலா...இதை நமது கம்யுட்டரில விளையாடலாம்.சற்று பெரிய விளையாட்டு இது.(580 எம்.பி.கொள்ளளவு) இதன் டோரன்ட் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கி டவுண்லோடு செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் நீ்ங்கள் ஒருவர் விளையாட போகின்றீர்களா - இரண்டு பேரா என முடிவு செய்யவும்.அதற்கு முன் விளையாட்டை பற்றி சிறு முன்னோட்டம். இந்த நிகழ்ச்சியை நீங்கள் டி.வி.யில் பார்த்திருந்தால் உங்களுக்கு விளையாட்டை பற்றி தெரிந்திருக்கும். இல்லாத பட்சத்தில் இந்த விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் சிங்கில் பிளேயரை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
26 சூட்கேஸ்களில் பெண்கள் வரிசையாக நிற்பார்கள். இதில ஏதாவது ஒரு பெட்டியை தேர்வு செய்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் 6 பெட்டிகளை தேர்வு செய்து வரிசையாக திறக்க சொல்ல வேண்டும்.குறைந்த ரூபாய்மதிப்பு உள்ள பெட்டியை தேர்வுசெய்தால் நமது பணமதிப்பு உயரும். அது அதிர்ஷ்டத்தை பொருத்ததே...இவ்வாறே அனைத்து பெட்டிகளையும் திறந்து விளையாடலாம். ஒவ்வொரு சுற்று முடிவிலும் உங்களுக்கு கொடுக்கும் பணத்தின் அளவை சொல்லுவார்கள். அதற்கு ஒற்றுக்கொண்டால் டீல் முடித்துவிடலாம். இல்லையென்றால் நோ டீல் அழுத்தி விளையாடலாம்.விளையாடி பாருங்கள் வித்தியாசமாக இருக்கும். இதிலும் இன்னும் பிற விளையாட்டுகள் உள்ளது. அதையும் விளையாடி பாருங்கள்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.