1. வீடியோ பார்மட் மாற்ற:
யு–ட்யூப் வீடியோக்களை flv, .3gp, ,mp3, ,AVI போன்ற பார்மட்டுகளுக்கிடையே மாற்றிப் பதிந்து கொள்ள Anjo.to என்னும்
ஆன்லைன் வசதி இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வீடியோ கிளிப்பினை
இயக்கிப் பார்த்து அதன் தள முகவரியைக் குறிப்பிட்டால், இந்த தளம் நமக்கு
அதனை நாம் கேட்கும் பார்மட்டில் மாற்றி அமைத்து நம் இமெயில் முகவரிக்கு
அனுப்பி வைக்கும். இந்த வசதி பெற செல்ல வேண்டிய தள முகவரி: en.anjo.to
வீடியோ
காட்சிகளை டவுண்லோட் செய்து பார்க்க அந்த தளம் சீரான வேகத்தில் நம்
கம்ப்யூட்டரை அடைய வேண்டும். இல்லையேல் சிறிது சிறிதாக இடைவெளி
விட்டுத்தான் அவை நமக்குக் கிடைக்கும். இந்த டவுண்லோட் செய்திடும் பணியை
வேகமாக மேற்கொள்ள நமக்குக் கிடைப்பதுதான் SpeedBit Video Accelerator என்ற புரோகிராம் ஆகும். இது Download Accelerator போலவே
செயல் படுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட சேனல்களைத் திறந்து வீடியோ
காட்சியினைக் கைப்பற்றி வேகமாக அதனை கம்ப்யூட்டருக்கு இறக்குகிறது. இதனைப்
பெற செல்ல வேண்டிய தள முகவரி: http://www.videoaccelerator.com/
3. பயர்பாக்ஸில் வேகத்தைத் துரிதப்படுத்த:
மீடியா பைரேட் (Media Pirate) என்னும் நிறுவனம் வீடியோ டவுண்லோடர் (Downloader)
என்னும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை உருவாக்கித் தந்துள்ளது. இது
பிளாஷ் பிளேயர் போன்றவற்றில் எம்பெட் ஆகியுள்ள வீடியோ காட்சிகளை மிக வேகமாக
நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து கொள்ள உதவுகிறது. இந்த
புரோகிராம் கிடைக்கும் முகவரி http://www.mediaconverter.org/
4. யு–ட்யூப்பினை எடிட் செய்திட:
ஆன்லைனில் யு ட்யூப் ரீ மிக்சர் (youtuberemixer) என்று
ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் பயன்படுத்துபவர்கள் அதனை அதன்
தளத்தில் வைத்தே எடிட் செய்யலாம்; மாற்றி அமைக்கலாம் மற்றும்
மெருகூட்டலாம். இது அடோப் பிரிமியர் எக்ஸ்பிரஸ் டெக்னாலஜி மூலம்
மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் கிராபிக்ஸ் காட்சிகளை
ஒரு பிரேமில் நுழைக்க முடிகிறது. அத்துடன் டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ
பைல்களையும் இணைக்கலாம். இது குறித்த முழு தகவல் களையும் அறிய http://www.sizlopedia.com/2007/06/17/youtuberemixertheonlineyoutubevideoeditor/ என்ற முகவரியில் உள்ள தகவல்களைப் பெறவும்.
5. யு–ட்யூப் வீடியோவை கம்ப்யூட்டரில் இயக்க:
ஆன் லைனில் FLV Player என்ற
ஒரு புரோகிராம் கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் தளத்திலிருந்து
டவுண்லோட் செய்த வீடியோக் களைக் காணலாம்.இந்த புரோகிராம் தரும் எளிய
கண்ட்ரோல்கள் மூலம் யு–ட்யூப் வீடியோக்களை இயக்கி அவற்றின் முன்னும்
பின்னும் செல்லலாம். இந்த புரோகிராமினைப் பெற http://www.download.com/30002139_410505954.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
6. பயர்பாக்ஸிற்கான யு–ட்யூப் பிளேயர்:
யு–பிளேயர் (YouPlayer) என்ற
பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஓர் ஆட்–ஆன் தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது.
இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசரில் யு–ட்யூப் வீடியோ பிளேயரை இணைக்கிறது.
இதில் உங்களுக்குப் பிடித்தமான யு–ட்யூப் வீடியோக்களைக் காணலாம். இதனை ஒரு
புக் மார்க்கர் ஆகவும் பயன்படுத்தலாம். இதில் யு–ட்யூப் லிங்க்குகளை
இழுத்து வந்து இதில் விட்டுவிட்டால் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம்.
இது குறித்த முழுமையான தகவல்களை https://addons.mozilla.org/enUS/firefox/addon/5709 என்ற முகவரி யில் உள்ள தளத்தில் பெறலாம்.
7. டெஸ்க்டாப்பில் ஒரு டவுண்லோடர்:
ஆர்பிட் டவுண்லோடர் (Orbit Downloader) என்ற
பெயரில் இலவச டெஸ்க்டாப் புரோகிராம் ஒன்று இணையதளத்தில் கிடைக்கிறது. இதன்
மூலம் பலவகையான தளங்களிலிருந்து வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட
முடியும். டவுண்லோட் செய்திடும் வழி மிகவும் எளிமையானது. இந்த புரோகிராமினை
இயக்கிய பின்னர், குறிப்பிட்ட வீடியோ மீது மவுஸின் கர்சரைக் கொண்டு
செல்லவும். அங்கு �Get It�ல என்ற ஒரு பட்டன் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ பைலாக இறக்கப்படும். http://www.orbitdownloader.com/ என்ற முகவரிக்குச் சென்றால் மேலும் தகவல்களும், இந்த புரோகிராமும் கிடைக்கும்.
8. வீடீயோ பைலை அப்லோட் செய்திட:
மற்றவர்கள்
பார்த்து ரசிக்க வேண்டும் என நாம் விரும்பும் வீடியோ காட்சிகளை அப்லோட்
செய்திட யு–ட்யூப் தளம் வழி தருகிறது. யு–ட்யூப் அப்லோடர் (YouTube Uploader) என ஒரு புரோகிராம் அந்த தளம் செல்லாமலேயே வீடியோக்களை அப்லோட் செய்திட நமக்கு உதவுகிறது. http://www.softplatz.com/Soft/AudioMultimedia/VideoTools/FreeYouTubeUploader.html என்ற முகவரியில் இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திடலாம்.
9. யு–ட்யூப் வீடியோவின் பார்மட் மாற்ற:
யு–ட்யூப்
தளத்தில் கிடைக்கும் வீடியோக்களை அனைத்து சாதனங்களிலும் பிளே செய்து
பார்க்க முடியாது. எந்த சாதனத்தில் இயக்கிப் பார்க்க வேண்டுமோ அதற்கான
பார்மட்டிற்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த பார்மட் மாற்றும்
வசதியினை கன்வெர்ட் ட்யூப் (Convert Tube) என்னும்
புரோகிராம் தருகிறது. ஆன்லைனிலேயே பார்மட்டை மாற்றி,பெர்சனல்
கம்ப்யூட்டர், ஐ–பாட், பி.எஸ்.பி., ஐ–போன், மொபைல் போன் இவற்றிற்குக்க்
கொண்டு சென்று இயக்கிப் பார்க்கலாம். http://converttube.com/
என்ற தளத்திற்குச் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெறவும். இதில் ஒரு
ருசியான தகவல் என்னவெனில், இந்த தளத்தை வாங்க உங்களுக்கு விருப்பம்
என்றால் 2000 டாலருக்கு மேல் குறிப்பிடும் தொகையைச் செலுத்திப் பெற்றுக்
கொள்ளலாம்.
10. ஐ–பாட் மற்றும் ஐ–போனுக்கு மாற்ற:
யு–ட்யூப் வீடியோக்களை ஐ–பாட் மற்றும் ஐ–போனில் பார்த்து ரசிக்க அவற்றை அதற்கேற்ற வகையில் மாற்ற வேண்டும். http://www.dvdvideosoft.com/freedvdvideosoftware.htm என்ற
முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையை
மேற்கொள்கிறது. மேலே குறிப்பிட்ட தளங்களில் தரப்பட்டுள்ள சாதனங்களை இறக்கி,
உங்களுக்குப் பிடித்த யு–ட்யூப் வீடியோக்களைப் பார்த்து ரசிக்கவும்.