சோனி அறிமுகபடுத்த இருக்கும் அடுத்த தலைமுறைக்கான விளையாட்டு கருவி

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் அடுத்த தலைமுறைக்கான
புதிய ஆச்சர்யமான அசையும் விளையாட்டு கருவியைப்பற்றி தான்
இந்த பதிவு.



சோனி நிறுவனம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விளையாடும் ஒரு ஆச்சர்யமான விளையாட்டு கருவியை
உருவாக்கியுள்ளது.பிளே ஸ்டேசன் என்ற பெயரில் நம் கையால்
படாதபாடுபடும் கீபோர்ட் மற்றும் மவுஸுக்கு விடுதலை அளித்து
கையடக்கமான டார்ச்லைட் போன்ற ஒரு கருவியை உருவாக்கியுள்ளது




இந்த விளைட்டில் நாம் சாதாரனமாக எப்படி விளையாடுவோமோ
அப்படி விளையாட வேண்டியது தான் நம் கையின் அசைவில் ஏற்படும்
மாற்றத்திற்க்கு ஏற்ப இது வேலை செய்கிறது. எதிரே இருக்கும்
மானிட்டரில் ( Eye Camera) கேமிராவானது நம் கையின் அசைவுகளுக்கு
தகுந்த மாதிரி INPUT எடுத்து கொள்கிறது. டென்னிஸ் விளையாடும்
ஒரு வீரர் எப்படி விளையாடுவாரோ அப்படி நாம் இதில் விளையாடலாம்
நம் கையில் பேட் இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால்
கையில் இந்த டார்ச் லைட்போன்ற கருவி இருக்க வேண்டும்.உட்கார்ந்த
இடத்தில் இருந்து விளையாடுவதற்குப் பதில் நம் உடலை அங்கும்
இங்கும் அசைத்தும் விளையாடும் இந்த விளையாட்டு நல்ல
உடற்பயிற்ச்சி தான். இன்னும் பெயர் வைக்காத இந்த கருவி இந்த
ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப்பற்றிய சிறப்பு வீடியோவையும்இத்துடன் இணைத்துள்ளேன்.

நன்றி வின்மணி

இந்த தகவல் வின்மணில் எடுக்கப்பட்டது 


நன்றி வின்மணி இந்த தகவல் வின்மணில் எடுக்கப்பட்டது