இணையக் கண்கட்டி வித்தை
கண்முன்னே நின்று மெஜிக் செய்வதையும், கண்கட்டி வித்தைகள் செய்வதையும் நாம் கண்டுள்ளோம். இணைய நுட்பத் திறன் கொண்டு, இங்கே ஒரு நபர் இணையத்தளத்திலேயே கண்கட்டி வித்தைக் காட்டுகிறார்.
அங்கே ஆறு சீட்டாட்டக் காட்கள் உள்ளன.
அதில் ஒரு காட்டை மட்டும் உங்கள் மனதால் நினைத்துக் கொள்ள வேண்டும்.
அதனை சொடுக்க வேண்டியதில்லை.
தொட வேண்டியதில்லை.
தளத்தில் உள்ள நபர் நீங்கள் நினைத்தக் காட்டை கண்டுப்பிடிப்பார்.
எப்படி?
இரண்டாவது பெட்டியில் அந்நபரது கண்களை நேராகப் பாருங்கள். நினைத்தக் காட்டை நினைத்துக்கொள்ளுங்கள்.
அவருக்கு உங்களைத் தெரியாது.
நீங்கள் எந்த காட்டை நினைத்தீர்கள் என்பதும் அவருக்கு தெரியாது.
ஆனால், அவருக்கு நிச்சயமாகத் தெரியும் நீங்கள் எந்தக் காட்டை நினைத்தீர்கள் என்று.
நான்காவது பெட்டியில்
நீங்கள் நினைத்த காட்டை தவிர மற்றைய காட்டுகள் மட்டும் தெரியும். நீங்கள் நினைத்த காட் மட்டும் மறைந்துவிடும்.
இது எப்படி சாத்தியம்?
இதோ முகவரி அவரது தளத்திற்கு செல்லுங்கள். முடிந்தால் கண்டுப் பிடியுங்கள்.
அப்படியே கண்டுப் பிடித்தால் எனக்கும் கொஞ்சம் அதன் விபரத்தை அறியத் தாருங்கள்.
நன்றி
அன்புடன்
அருண் HK Arun