ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு | Vodafone's new offer announcement to compete with JEO

ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

வோடபோன் புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ.255 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவையும், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
அன்லிமிட்டெட் அழைப்புகள் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவை கடந்து வாய்ஸ் கால் பயன்படுத்துவோருக்கு கூடுதல் நிமிடங்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய சலுகை டெல்லி/என்சிஆர், மும்பை, குஜராத், கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வோடபோனின் புதிய ரூ.255 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.251 மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.