தவணைக் காதல்

ஏக்கத்தினால் தூக்கம் மறந்தேன்
அடியே உன்
ஏறுக்குமாறான விழி அசைவால்.


ஒருநாள் அருகமர்ந்து அகமகிழ்வாய்
அன்று முழுதும்
உன் நினைவிலேயே உயிர் உருளும்

மறுநாளோ அந்நியனைப் பார்ப்பதுபோல்
அலட்சியமாக்கி என்னை
அலைக்கழித்து அழ வைப்பாய்


சோகத்தில் சுரத்தின்றி திரியும்போது
திரும்ப வந்து
தித்திக்கப் பேசித் திணறடிப்பாய்

அடியே பாதகி
அன்பை முழுதாய்க் காட்டாமல்
அதில் ஏனடி தவணை முறை?