கனவில் வந்தவள்


நேற்று என் கனவில் வந்தாய்
நிஜம்போலவே இருந்தது கண்ணம்மா


நின்று கொண்டே நிலைகுலைய வைத்தாய்
நீட்டிய கரங்களில் சிக்கிவிடாமல்.

கனவில்கூட கட்டுப்பாடுதானா
காதல் டூயட் பாடக்கூடாதா?

முறைத்துப் பார்த்தாய் பக்கம் வந்தபோது
முடிஅலைந்ததில் மோகனம் கண்டேன்

சூர்யா பட ஸ்டில் போல் வேண்டாமென்றால்
ஆர்யா படப் பாடல்போல் கேட்கக்கூடாதா?

தீப்பிடிக்க முத்தம் வேண்டாம் என்றாய்
டீக்குடிக்க சத்தம்(காசு) போதுமென்கிறாய்

பிச்சைக்காரி போல் பேசாதே
பிச்சை போட்டுவிட்டு பேசு!