கூண்டுக் கிளிகள்

காதல் கொண்ட கணவர்களே
கண்ணம்மாபோல் எமைப் பார்ப்பீரோ


பாரதியின் பாடல்கள் போல்
பாங்காய் எமைப் போற்றுவீரோ

பாதி உடல் ஈந்துவிட்டீர்
பரவசத்தில் பாவையர் யாம்

இருகரச் சிறைக்குள் எம்
இதயத்தை அடகு வைத்தோம்

பாசம் கொள்ளப் போட்டியிடுவோம்
நேசம் செலுத்த சண்டையிடுவோம்

விட்டுக்கொடுத்து விளையாடுவோம்
வீடு முழுக்க மக்கள் கொள்வோம்

பறந்து திரிந்த காலம் மறப்போம்
பறவைக்கான கூட்டில் அமர்வோம்

பாட்டியும் தாத்தனும் ஆகும் வரையும்
பரவசமாய்க் காதல் கொள்வோம்